இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் வீடுகள் திறந்து வைப்பு!
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அவற்றை திறந்து வைத்துள்ளனர்.
3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் எட்டயபுரம் – குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், சிவகாசி – ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.