இன்றைய ராசிபலன் – 02.02.2024

இன்றைய ராசிபலன் – 02.02.2024

பொதுப்பலன்: திருமணம், வளைகாப்பு செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட, காது குத்த, பயணம் மற்றும் வீடு கட்ட தொடங்க, வங்கியில் கணக்கு தொடங்க, குழந்தையை தத்தெடுக்க, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, கிரஹப்பிரவேசம் செய்ய நன்று. மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, எள் தீபம் ஏற்றுவது நன்மை தரும். லலிதா சஹஸ்ரநாமம், அன்ன பூர்ணாஷ்டகம் படிப்பதால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேஷம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் வரக் கூடும். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பர். அக்கம் பக்கத்தினரிடம் அளவாக பழகவும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கடுமை வேண்டாம்.

ரிஷபம்: தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். குழப்பங்கள் தீர்ந்து கணவன் – மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தாய்வழி, மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மிதுனம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும்.

கடகம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். தாய்வழி உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நேசக் கரம் நீட்டுவர்.

சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

கன்னி: விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

துலாம்: நெருங்கியவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். திடீர் செலவுகளால் சேமிப்பு கரையும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

தனுசு: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுவீர்கள்.

மகரம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

கும்பம்: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். பணவரவு உண்டு. மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவீர்.

மீனம்: சில நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். துடிப்புடன் காணப்படுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள்வசூலாகும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

CATEGORIES
TAGS
Share This