இன்றைய ராசிபலன் – 04.01.2024

இன்றைய ராசிபலன் – 04.01.2024

மேஷம்: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும்.

ரிஷபம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்து காட்டுவீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு உண்டு.விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்.

கடகம்: நீண்ட நாள் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும்.

சிம்மம்: வீண் குழப்பங்கள் விலகி வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச்செலவு உண்டு. பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

கன்னி: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவர்.

துலாம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். பழைய வழக்கு சாதகமாகும்.

விருச்சிகம்: பிள்ளைகளுக்காக சேமிக்க தொடங்குவீர். வீடு, மனைவாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும்.வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாண்டு, வாடிக்கையாளர்களை கவருவீர்.

தனுசு: சவாலான விஷயங்களை கூட இன்று சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். போட்டி, விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பிரமுகர்கள் அறிமுகமாவர்.

மகரம்: முகப்பொலிவு கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. தம்பதிக்குள் கருத்து மோதல் வந்து நீங்கும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் வேலை பளு கூடும்.

மீனம்: சோர்வு,களைப்பு நீங்கி சுறு சுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர். கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். பணவரவு திருப்தி தரும்.

CATEGORIES
TAGS
Share This