கைது செய்யப்பட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்களும் நிபந்தனையின் கீழ் விடுதலை!
இலங்கை கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி குறித்த 6 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் 6 கடற்தொழிலாளர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடற்தொழிலாளர்களிடம் கைப்பற்றப்பட்ட 2 படகுகளையும் அரசுடைமையாக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized