ஈழத் தமிழர்களை ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ் – திருமாவளவன்

ஈழத் தமிழர்களை ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ் – திருமாவளவன்

“ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை” என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான்.” என திருமாவளவன் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This