சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி!

சாந்தன் இலங்கை வர சிறீதரன், மனோ கூட்டாகக் கோரிக்கை : பரிசீலிப்பதாக ரணில் உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நண்பகல் நேரில் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினார்கள்.

இந்தக் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னாயக்கவுக்கு, சந்திப்பின்போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களைத் தருமாறும் சிறீதரன் எம்.பியிடம் ஜாபதிபதி கோரியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This