ரஷ்ய ஜனாதிபதியாக 6 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டொலர் சம்பாதித்த விளாதிமிர் புதின்!

ரஷ்ய ஜனாதிபதியாக 6 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டொலர் சம்பாதித்த விளாதிமிர் புதின்!

ரஷ்யாவின் ஜனாதியாக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டொலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய ஜனாதியாக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டொலர் புதினுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், வங்கி வைப்புத் தொகை, அவரது இராணுவ ஓய்வூதியம் மற்றும் சொத்து விற்பனையின் வாயிலாககிடைத்த பணமும் அடங்கும்.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்க ஜனாதிபதியின் ஓராண்டு வருமானமே 4 லட்சம் டொலராக உள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2 தசாப்தங்களாக ரஷ்ய ஜனாதிபதியாக புதின் கோலோச்சி இருந்து வருகிறார். இந்நிலையில்,வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் புதின் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் கூறுகையில், “புதினுக்கு 10 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 54.5 மில்லியன் ரூபிள் (6,06,000 டொலர்) சேமிப்பு உள்ளது. பழங்கால கார்களும் அவரிடம் உள்ளன.

மேலும், ரஷ்ய ஜனாதிபதிக்கு மாஸ்கோவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு அப்பார்ட்மெண்ட் மற்றும் ஒரு கேரேஜும் உள்ளது என தெரிவித்துள்ளது. பின்லாந்தையொட்டிய ரஷ்ய எல்லைக்கு அருகில் புதினுக்கு ரகசிய குடியிருப்பு ஒன்று உள்ளதாக மாஸ்கோ டைம்ஸ் ஆவணங்களை மேற்கோள்காட்டி கூறியுள்ளது.

ரஷ்ய அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, 71 வயதான புதின் 2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்கவழிவகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This