இடைக்கால வரவு,செலவுத்திட்டம் – இன்று தாக்கல்!

இடைக்கால வரவு,செலவுத்திட்டம் – இன்று தாக்கல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு,செலவுத்திட்டத்தினை தாக்கல் செய்கிறார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6ஆவது வரவு,செலவுத்திட்டம் ஆகும்.

இந்திய நிதி அமைச்சர்களில் மிக அதிக எண்ணிக்கையில் வரவு,செலவுத்திட்டத்தினை தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய். அவர் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, மொத்தமாக 10 வரவு,செலவுத்திட்டத்தினை தாக்கல் செய்துள்ளார். இவற்றில் 1959–1964 வரை 5 முழு நிதி ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம், ஒரு இடைக்கால வரவு,செலவுத்திட்டம் என 6 வரவு,செலவுத்திட்டங்களை தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்தார்.

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் நிர்மலா சீதாராமன்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்படுவது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

CATEGORIES
TAGS
Share This