கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு!

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு!

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சமூக ஒருங்கிசைவுக்கான டெல்வொன் உதவி (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி உடன் கைச்சாத்திட்டிருந்தார். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

வட மாகாணத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக GGP திட்டத்தினூடாக DASH அமைப்புக்கு 364,963 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 116 மில்லியன்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான மீட்சி மற்றும் ஒருமைப்பாட்டு செயன்முறையில் ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிப்பதுடன், 2027 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி பாதிப்பற்ற நாடாக இலங்கையை மாற்றும் இலங்கையின் இலக்குக்கும் ஆதரவளிப்பதாக தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டார்.

இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சந்திரசிறி குறிப்பிடுகையில்:

“இலங்கையின் நீண்ட கால நண்பரும், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பாரிய நன்கொடை வழங்குநராகவும் ஜப்பான் திகழ்வதுடன், 2010 ஆம் ஆண்டு முதல் DASH க்கு தொடர்ச்சியாக நிதியளிப்புகளை வழங்கியுள்ளது. ஆயிரக் கணக்கானவர்களை பாதுகாப்பாக உயிர்வாழ்வதற்கு இந்த ஆதரவு உதவியுள்ளதுடன், தொடர்ச்சியான உதவியுடன், கண்ணிவெடிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், DASH க்கான ஜப்பானின் உதவி தொடர்வதுடன், பலருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அனுகூலமளிக்கின்றது. ஜப்பானுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். ஜப்பான் மற்றும் இதர தரப்பினரால் நிதியளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளம் மக்களை ஒன்றிணைப்பதுடன், சமாதானம் மற்றும் மீள உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.

GGP திட்டத்தின் கீழ் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் நான்கு அமைப்புகளுக்கும் ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளித்துள்ளதுடன், 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நீண்ட காலமாக ஆதரவளிக்கும் நன்கொடை வழங்குநராக திகழச் செய்துள்ளது. ஜப்பானின் மனிதநேய செயற்பாடுகளுக்கான ஜப்பானின் மொத்த உதவி 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமானதாகும்.

DASH இனால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தினூடாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 6000 க்கும் அதிகமான மக்களை மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கல் போன்றவற்றுக்கு பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This