சுமந்திரனின் முடிவு பிழை: ரஜனி பகிரங்க குற்றச்சாட்டு!

சுமந்திரனின் முடிவு பிழை: ரஜனி பகிரங்க குற்றச்சாட்டு!

செயலாளர் பதவியை சுமந்திரன் கேட்டது பிழை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயப்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடக  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது “இரு அணிகளாக பயணிப்பது அழகல்ல. ஒன்றாக பயணிப்பதற்கான முயற்சியின் ஆரம்பமாக தனக்கு செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என சுமந்திரன் கோரியது தொடர்பில் உங்கள் பதில் என்ன” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சுமந்திரன் செயலாளர் பதவியை கேட்டது பிழை. அதில் மாற்று கருத்து இல்லை.

காரணம் என்னவென்றால் அவர் ஒரு தலைவர் வேட்பாளராக இருந்து மட்டக்களப்பில் வைத்து தலைவர் பதவி யாழ்ப்பாணத்திற்கு கிடைத்தால் செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ளார்.ஊடங்களில் அந்த விடயம் செய்தியாக வந்திருந்ததை நானும் பார்த்திருந்தேன். அவ்வாறான உறுதியை வழங்கி விட்டு தற்போது செயலாளர் பதவிக்கு போட்டிக்காக வருவதை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This