கொரிய தீபகற்பத்தில் பதற்றம் : மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை!
வடகொரியா தமது கிழக்குக் கரையோரப் பகுதியில் பல ஏவுகணைகளை வீசியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. அண்மைய மாதங்களில் வடகொரிய அரசு ஏவுகணைகளை மீண்டும் மீண்டும் பரிசோதித்து, பிராந்திய பதற்றத்தை உயர்த்தியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சின்போ துறைமுகத்திற்கு அருகில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை அல்லது வகை தெளிவாகத் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை வடகொரியா புதிய மூலோபாய கப்பல் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
CATEGORIES உலகம்