காதலியை கொலைசெய்து கொன்கிரீட் இட்ட காதலன்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை

காதலியை கொலைசெய்து கொன்கிரீட் இட்ட காதலன்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான உண்மை

தென் கொரியாவைச் சேர்ந்த ஆண் ஒருவர் தனது காதலியைக் கொலை செய்து, அவரது உடலை கான்கிரீட் இட்டு மறைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த பெண் காணாமல் போய் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உண்மை தெரியவந்துள்ளது.

தற்போது 50 வயதாகும் குறித்த நபர், வாக்குவாதம் முற்றி 2008 அக்டோபரில் காதலியைக் கொன்றதாகவும் ஜியோஜியில் உள்ள தனது குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அந்த பெண்ணை பொருளால் தாக்கியதாக உள்ளூர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர் அவர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் வைத்து, அவரது மொட்டைமாடியில் செங்கல் மற்றும் சிமெண்ட் அடுக்கின் கீழ் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீட்டில் பராமரிப்பு பணியின் போது ஊழியர் ஒருவர் இந்த சடலத்தை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

சூட்கேஸில் இருந்ததால் இறந்த உடல் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், கைரேகை ஆய்வில் காணாமல் போன பெண்ணின் உடல் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸார் சடலத்தைக் கண்டெடுக்கும் போது சந்தேகநபர் அவரது வீட்டில் இருக்கவில்லை எனவும் அவர் விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This