இருளில் முழ்கிய பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

இருளில் முழ்கிய பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் இன்று (26) மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 9 இலட்சம் ரூபா (877,741.90) மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருந்ததன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ஆம் திகதி புகையிரத திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்டது.

ஆனால் அன்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This