யார் இந்த சனத் நிஷாந்த? : உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

யார் இந்த சனத் நிஷாந்த? : உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 25ம் திகதி அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (48) உயிரிழந்தார்.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த சனத் நிஷாந்த பெரேராவிற்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் மூன்று சகோதரர்கள் .

அவர்களில் ஒரு சகோதரர் இறந்துவிட்டார்.

சனத் நிஷாந்த சிலாபம் சென். மேரிஸ் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

1997ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான சரத் ஹேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஆராச்சிக்கட்டுவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பு சனத் நிஷாந்தவுக்கு கிடைத்தது.

2004 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற அவர் 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

மே 31, 2010 இல், அவர் வடமேற்கு மாகாண சபையின் மீன்பிடி, நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 62,996 விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலாவதாகத் தெரிவான அவர், மீண்டும் முன்னைய அமைச்சு பதவிகளிலேயே பதவியேற்றார்.

அந்த மாகாண சபையில் ஒரு காலத்தில் பதில் முதலமைச்சராகவும் அவரால் பதவி வகிக்க முடிந்தது.

சனத் நிசாந்தவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

CATEGORIES
TAGS
Share This