இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானார்!

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இன்று (25) இலங்கையில் காலமானார்.

இவர் தனது 47ஆவது வயதில் காலமானதாக குறிப்பிடப்படுகின்றது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கடந்த 5 மாதங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பவாதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார்.

பாரதி படத்தில் மயில் போல பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அவர் பெற்றிருந்தார்.

அத்துடன் என் வீட்டுச் சன்னல் என்ற பாடலையும், தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை உள்ளிட்ட பாடல்களையும் பவதாரிணி பாடியுள்ளார்.

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள மாபெரும் இசைநிகழ்ச்சிக்காக இளையராஜா நேற்று (24) மாலை இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This