திரைப்படமாக உருவாகும் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு?

திரைப்படமாக உருவாகும் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு?

சமீப காலமாக அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர்கள் என்டி ராமராவ், ராஜசேகர ராவ், சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி ஆகிய பலரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகியது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இளமைக்காலம், மருத்துவராக பணியாற்றிய நிகழ்வுகள், அரசியல் கட்சியை நிறுவி வன்னிய சமுதாய மக்களுக்கு உதவியது, வேலைவாய்ப்பு மற்றும் தனி ஒதுக்கீடு பெற நடத்தப்பட்ட போராட்டங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This