பல்கலைக்கழக மாணவியின் உயிரை காவு கொண்ட டெங்கு!

பல்கலைக்கழக மாணவியின் உயிரை காவு கொண்ட டெங்கு!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் குறித்த மாணவிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பின்னர் அவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை, கொத்துரொட்டியை உண்டு விட்டு உறங்கச் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று ஹொரணை – வல்பிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண் சில காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கொத்துரொட்டியை உண்டதன் காரணமாகவா? அவர் உயிரிழந்தார் என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This