நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!
சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுவரும் வடகொரியாவில், அமெரிக்காவுக்கு எதிரான அதிபர் கிம் ஜாங் உன்னின் செயல்பாடுகள் காரணமாக மக்களின் வரிப்பணம் அனைத்தும் அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சோதனைகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது.
இந்த விஷயத்தை அமெரிக்கா தொடக்கத்தில் இருந்து கண்டித்தும் கேட்காததால், உலக நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாக வடகொரியா இருந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணை சோதனைகள் அடுத்தடுத்து வடகொரியாவின் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வடகொரியா நீருக்கடியில் தனது அணுஆயுத ஏவுகணையை சோதனை செய்து பார்த்துள்ளது. வடகொரியாவின் ஹேயில் 5-23 என்று பெயரிடப்பட்ட ஏவுகணையை அந்நாட்டு அரசு நீருக்கடியில் சோதனை செய்ததில், ஏவுகணை இலக்கை தாக்கி அழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தென்கொரியா, ஜப்பான், வடகொரியா ஆகிய நாடுகள் சேர்ந்து கூட்டு இராணுவ பயிற்சியில் கொரிய – ஜப்பான் கடல் பகுதியில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து, வடகொரியா தற்போது தனது இராணுவ பலத்தை காண்பிப்பதாக ஏவுகணை சோதனை நடத்தி இருக்கிறது.