நரம்புகள் கடத்தும் தகவலை கண்டறிந்து இயங்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!
சர்வதேச அளவில் கண்டுபிடிப்புகள் என்பது தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிய பயணமாக இருந்து வருகிறது. மனிதர்களின் தேவை மற்றும் எதிர்காலத்தை கணக்கிட்டு அறிமுகமாகும் பல புதிய கண்டுபிடிப்புகள் வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் மனிதனின் மூளை போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றனர்.
மனிதனின் நரம்பு மண்டலத்தின் தனித்தனி செயல்பாடுகளை கண்காணித்து நமது மூளைக்கு செல்லும் சமிக்ஞைகளை கைப்பற்றி, அதன் வாயிலாக நாம் சொல்ல நினைப்பதை அல்லது செய்ய நினைப்பதை பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம் ஒன்றை முதற்கட்டமாக தயாரித்திருக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு மனிதனின் நினைவுகளை புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனினும் நரம்புகள் வழியே கடத்தப்படும் தகவல்களை சேகரித்து அதற்கான முயற்சிகளை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முயற்சி வெற்றியடைந்துள்ள நிலையில், படிப்படியாக திறன் மேம்படுத்தப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.