ஏப்ரல் 16இல் நாடாளுமன்ற தேர்தல்?

ஏப்ரல் 16இல் நாடாளுமன்ற தேர்தல்?

நாடாளுமன்றத்துக்கு கடந்த தடவை போல 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் திகதி அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு நடத்தப்படும் தேர்தல் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தொடங்கலாம் என்று இன்று மதியம் தகவல்கள் வெளியானது. டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், “ஏப்ரல் 16ஆம் திகதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This