யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து ; 5 பேர் படுகாயம்!

யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து ; 5 பேர் படுகாயம்!

யாழ். ஊர்க்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This