நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்!
அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்துள்ளது.
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இந்த விமானம் பியூர்டோ ரிக்கோவில் உள்ள சென் ஜுவான் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விமானம் நடு வானில் தீ பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
CATEGORIES உலகம்