முல்லைத்தீவில் கரையொதுங்கிய கடற்தொழிலாளரின் சடலம்!

முல்லைத்தீவில் கரையொதுங்கிய கடற்தொழிலாளரின் சடலம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத கடற்தொழிலாளர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையொதுங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த உடல் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிசார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்துச் சென்று உடலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This