காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தும் “வேலண்டைன்”
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அறிந்த வார்த்தைகளில் ஒன்று தான் காதல்.
இன்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
சாதி, மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தும் நாளான இன்றைய காதலர் தினம் பிறந்த கதை பற்றி எம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள்
வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படும் இந்த தினத்தை நாமும் நமக்குத் தெரிந்தப் படி கொண்டாடுகிறோம்.
ஆனால் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து சிந்தித்தே இல்லை.
ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.
ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக காணப்பட்டது.
எனவே, அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் ஒருவர் திருமணம் செய்து வைத்துள்ளார்.
அரசனின் உத்தரவை மீறி ஆண்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததை அறிந்த கிளாடியுஸ் பெப்ரவரி 14 ஆம் திகதி வேலண்டைன் எனும் பாதிரியாருக்கு மரண தண்டனையை விதித்தார்.
அவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.
இது பொதுவான விடயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
உறவினர்கள் ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.