தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை!

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை!

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த பெண் நேற்று (18.01.2024) பெண் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மாவீரர் தினத்திற்கு முதல் நாள் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயர் பொறித்த கேக்கை வெட்டிய காரணத்திற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு – மாவீரர் தின நாளில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியதாக குறித்த பெண்ணும் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஊடாக விடுதலையாகியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This