ஜனாதிபதி ரணில் சுவிட்சர்லாந்து பயணம்!

ஜனாதிபதி ரணில் சுவிட்சர்லாந்து பயணம்!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்து பயணித்துள்ளார்.

Emirates Airlines EK 649 என்ற விமானத்தின் மூலம் இன்று அதிகாலை பயணித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி உகாண்டாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

குறித்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல அமைச்சர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This