கோவில் வளாகத்தை சுத்தம் செய்த பிரதமர் மோடி!

கோவில் வளாகத்தை சுத்தம் செய்த பிரதமர் மோடி!

அடல் சேது பாலம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். நாசிக் சென்றுள்ள பிரதமர் மோடி கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு செய்தார்.

அதன்பின், பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக கோயில் வளாகத்தில் தண்ணீர் வாளியை தானே தூக்கி சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவில் வளாகத்தில் அவர் சுத்தம் செய்யும் காணொளி வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This