மட்டக்களப்பில் முதலைகளின் நடமாட்டத்தால் அச்சம்!

மட்டக்களப்பில் முதலைகளின் நடமாட்டத்தால் அச்சம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக சிறிய குளங்களில் நீர் நிரம்பி காணப்படுவதன் ஆறுகள் வாவிகள் பெருக்கெடுத்து வருகின்றது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் அதிகளவான மக்கள் வாழும் பகுதிக்குள் நேற்று (11) காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை பிடித்து செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதேபோன்று, புதன்கிழமை (10) திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This