பிரித்தானிய இளவரசி யாழ் பயணம் – ஊடகவியலாளர்களுக்கு தடை!

பிரித்தானிய இளவரசி யாழ் பயணம் – ஊடகவியலாளர்களுக்கு தடை!

இலங்கைக்கு 03 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களுக்கு சென்று செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்படாமல் வலையொளி அலைவரிசை (YouTube Channel) உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகை தரவுள்ள நிலையில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This