பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்!

பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்!

தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது என்று பிரித்தானிய இராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்தது

தாக்குதல் நடந்த கப்பல் பிரித்தானிய தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஆகும். பார்படோஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக கப்பல் அருகே படகு ஒன்று சென்றுள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This