யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகள் தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான பொது துபியில் தியாகிகள் தின நினைவேந்தல் இடம்பெற்றது.

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து இறந்தவர்களை நினைவுகூர்ந்து மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வாறு உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் , ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This