பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு (UPDATE)

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு (UPDATE)

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர்.

அடுத்து பலுசிஸ்தான் மாகாணத்தில் கிலா சைபுல்லா நகரில்ஜேயுஐ – எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்குமேற்பட்டோர் படுகாயம் அடைந் துள்ளனர்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தலிபான், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில்மட்டும் பாகிஸ்தானில் 789 தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 84 சதவீத தாக்குதல்கள் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் நிகழ்ந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This