காங்கிரசை ஒழிக்க இந்தியா கூட்டணிதான் சதி செய்கிறது: மத்திய அமைச்சர்

காங்கிரசை ஒழிக்க இந்தியா கூட்டணிதான் சதி செய்கிறது: மத்திய அமைச்சர்

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான கட்சி. மற்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்- மம்தா பானர்ஜி), பீகார் (நிதிஷ்குமார்- ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி யாதவ்- லாலு கட்சி), உத்தர பிரதேசம் (அகிலேஷ் யாதவ்) மாநில கட்சிகள் இதற்கு உதாரணம்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிராஜ் கூறுகையில் “இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை. அது ஆதாயத்திற்கான கூட்டணி. மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம். இந்த இந்தியா கூட்டணிதான் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக சதி செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This