இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் ஜெ.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் 199, கேரளத்தில் 148, மகாராஷ்டிரத்தில் 139, கோவாவில் 47, குஜராத்தில் 36, ஆந்திரம் மற்றும் ராஜஸ்தானில் 30, தமிழகத்தில் 26, புது தில்லியில் 21, ஒடிசாவில் 3, தெலங்கானா மற்றும் ஹரியாணாவில் தலா ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளது.

கடந்த டிசம்பரில் 1339 மாதிரிகளும், ஜனவரியில் 65 மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா திரிபு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன. ஜெ.என்.1 வகை கரோனாவின் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா சிகிச்சையில் 4,002 பேர் உள்ளனர். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 4,50,18,792 ஆக உள்ளது.

கேரளத்தில் 2, கர்நடாகம் மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என 4 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,3,396 ஆக உள்ளது.

CATEGORIES
TAGS
Share This