யாழ். கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ். கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கிலான விசேட சுற்றிவளைப்புக்கள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கட்டைக்காடு காட்டுப் பகுதிக்குள் போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம், நேற்று (5) மாலை 5 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தை திடீரென சுற்றிவளைத்து புதைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை தேடினர்.

காட்டுப் பகுதிக்குள் பெருமளவான கஞ்சா பொதிகளை புதைத்துவைத்துள்ள கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரின் சோதனைகளால், அந்த கஞ்சா பொதிகளை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடிய நிலையிலேயே பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இரண்டு மணிநேரமாக 15க்கும் மேற்பட்ட கடற்படையினர் புலனாய்வாளர்களுடன் தேடுதல் நடத்திவந்தபோது 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This