பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம்!
தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் திருகோணமலை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை நேற்று சனிக்கிழமை (06) பகல் 1.30 மணியளவில் சந்தித்தார்.
புதிதாக கொண்டு வரப்பட இருக்கின்ற மீனவர் சட்ட மூலம் தொடர்பாக கலந்துரையாடலை மீனவர்களுடன் மேற் கொண்டார்.
இக் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் விஜயத்தின் போது 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் சகல அதிகாரங்களும் மாகாண சபைக்கு இருக்கின்றன ஆனால் அவர் மாகாண சபை தேர்தலை நடாத்த முற்படவில்லை.
காலங் காலமாக யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றுகின்றார்.
இது போன்று பல தடவைகள் ஏமாற்று வேலைகளை செய்துள்ளார் இம் முறையும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.ஆனால் இவருடைய பொய்யான ஏமாற்று வேலைகளை நம்புவதற்கு தமிழர்கள் முட்டால்கள் இல்லை.