4,269 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

4,269 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் 2022 ஆம் வருடம் 2,505 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது.

2022 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுமார் ஆயிரம் பேர் வரையானோருக்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்தது. யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் டெங்கு நூளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This