நடைமுறைக்கு வந்த வரி அடையாள எண்!

நடைமுறைக்கு வந்த வரி அடையாள எண்!

வரி அடையாள எண்ணை (TIN number) பெறுவதால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரிவிதிப்பிற்குட்பட மாட்டார்கள் எனவும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும் கட்டாயம் உள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் நடப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

CATEGORIES
TAGS
Share This