உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!

உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,

“இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் சில வலைத்தளங்கள் இந்த அட்டவணையைக் காட்டக்கூடும். பரீட்சார்த்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிப்பத்திரத்தில் காட்டியுள்ளோம். அதனால் வேறு எங்கும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை”. என தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This