கல்லடி பாலத்தின் அருகாமையில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை!

கல்லடி பாலத்தின் அருகாமையில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை!

மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்தின் அருகாமையில் இராம கிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரை ஆரம்பிக்கும் முகமாக நேற்று (01) திகதி திங்கட்கிழமை காலை சுப வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் கணேசராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விபுலானந்த அடிகளாரினால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை ஸ்தாபிக்கப்பட்டதுடன், இன்று ராமகிருஷ்ண பகவானின் கல்ப தரு தினம் என்பது விசேட அம்சமாகும்.

CATEGORIES
TAGS
Share This