பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது; அரசின் இனவாதமுகம் தெரிகிறது
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் – சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்கவேண்டும் என ஒப் புக்கொண்டிருந்த தரப்பு அதே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரல் குற்றமாக கருதி கைது செய்வதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். தமிழீழ விடுத லை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடியமைக்காகவும், மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தியமைக்காகவும்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பாக கேட்டபோதே அ வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையின் மனித உரிi மகள் ஆணைக்குழுவே 2015ம் ஆண்டில் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யபட்டிருந்தாலும் அவர்களுடைய உறுப்பினர்கi ள நினைவுகூருவதற்கு உறவினர்களுக்கும், மக்களுக்கும் உரித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே நினைவுகூருவதற்கு உரித்துள்ளது.
அதற்கான அனுமதியை வழங்கவேண்டும். அதுவே சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது எ ன அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்கள். இன்றைக்கு அரசாங்கத்தில் உள்ள இதே தரப்புக்க ள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமான சட்டம் அதை நீக்கவேண்டும்.
அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைய மாற்றவேண்டும் என ஒப்புக் கொண்டிருந்தார்கள். இன்று அ தே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரலை குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பதை நாம் வன்மையா க கண்டிக்கிறோம்.
இன்றைக்கு ஜே.வி.வி தலைவரை கொண்டாடும் நிலை இருக்கும் என்றால் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரையும், அவர்களின் உறுப்பினர்களையும் நினைவுகூருவது குற்றம் என்றால் அதற்கு இனவாதம் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். அதைவிட வேறு காரணங்கள் இல்லை.
தமிழ் மக்கள் இதுவரையில் மாற்றம் என்ற ஒன்றை நம்பிக் கொண்டிருந்தால் அது பொய் என்பதற்கா ன சிறந்த சாட்சி இது ஒன்றுதான். மாவீரர்களை நினைவுகூருவது எங்கள் ஆத்மாவுடன் இணைந்த விட யம் என்றார்.