ஊடகவியலாளர்களால் நாட்டில் இனவாதம்: அர்ச்சுனாவின் கருத்தால் எழப்போகும் சர்ச்சை
ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது திரிபுபடுத்துகின்றீர்கள். உண்மையில் இனவாதமாக செயற்படும் ஊடகங்களால் தான் நாட்டில் பிரச்சினைகளே ஏற்படுகின்றது. ஊடகங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமடைந்த வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற பயிற்சி பட்டறையை முடித்துவிட்டு வரும் வழியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
10ஆவது, நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்த பாதுகாவலர்கள் வேறு ஆசனத்தில் அமரச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்கள் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது.. சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என அர்ச்சுனா இராமநாதன் பதிலளித்தார்.
இவரது இந்த செயல்பாடானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மீண்டும் மீண்டும் பேஸ்புக் தளத்தின் மூலம் அவர் நேரடி காணொளிகளை வெளியிடுவதால் தற்பேர்த இது பெரும் சர்ச்சையை ஏற்புடுத்தியுள்ளது எனலாம்.
மேலும், தற்போது ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் அவர் விமர்ச்சித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சில பிரபல ஊடகங்கள் நேர்காணல் செய்ததாகவும் பின் அதை குறுகிய நிலையில் தங்களுக்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தி தவறான அர்த்தபாடுடன் வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் இவ்வாறான செயல்களால் தான் சமத்துவம் இல்லாமல் போகின்றது.
இன்று நாடாளுமன்றில் எங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. நாமும் சாதாரண மக்களைப்போன்று தான் வெளியில் செல்கின்றோம். நீங்கள் பரப்பும் செய்திகளால் எங்களுக்கு பாதுகாப்பின்மை இல்லாமல் போகின்றது.
மேலும், நான் நாடாளுமன்றம் செல்லும் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ஒரு நபர் தெரிவு செய்யப்படவில்லை அப்போது எப்படி நான் அமர்ந்த கதிரை எதிர்க்கட்சி தலைவருடையது என கூற முடியும்? என கேள்வியெழுப்பினார்.