ரணிலை நீதிமன்றங்களில் நிறுத்த பல வழக்குகள் தயார்!
மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்குகள் பல ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் அரசியல் குழுவை சேர்ந்த வசந்த சமரசிங்கவே இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத் தேர்தல் மேடைகளில் அரசாங்கத்தை விமர்சித்து கூறுகின்றனர். அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். அப்படியென்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லவா? ஒரே புள்ளடியில் பலருக்கு போக இடமின்றி இருக்கின்றனர். இப்போது இனி மத்திய வங்கி மோசடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் பல்வேறு வழக்குகள் வரப்போகின்றது. ஜனாதிபதியாக இருந்தமையினால் விடுபாட்டு சலுகையில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடர முடியாது இருந்தன. இனி தொடர்ச்சியாக வழக்குகள் வரும் அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யப் போகின்றார்கள் என்பது தெரியும்.