ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர், கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள கட்டுமான தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் ஒருவரும், ஆறு பும்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதைக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு பதில் தாக்குதல் நடத்த பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ரியாசியில் கடந்த ஜூன் 9 ஆம் திகதி பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது யாத்ரீகர்கள் உயிரிழந்திருந்தனர்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர், ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லா, இந்தத் தாக்குதல்களை “கொடூரமானவை” என்று விவரித்தார்.

CATEGORIES
Share This