அருணாச்சலப் பிரதேசத்தில் பாரிய நிலச்சரிவு: இரண்டாக பிளந்த பாதைகள் – பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியம்
அருணாச்சலப் பிரதேசத்தின் ஹுன்லி மற்றும் அனினி இடையேயான நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுக் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதைகளுக்கு இடையே ஆழமான வெட்டு ஏற்பட்டதுடன், சீனா எல்லையைக் கொண்ட திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் பாதையில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாகவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்கள் பெரும் சௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கு கமெங் பகுதியில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவானதை தொடர்ந்து இன்று காலை பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தரவுகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES இந்திய செய்திகள்