ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்னாள் ஜனாதிபதிகள் திட்டம்; சிறப்புரிமை குறைக்கப்படுமா?

ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்னாள் ஜனாதிபதிகள் திட்டம்; சிறப்புரிமை குறைக்கப்படுமா?

நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை குறித்த சர்ச்சை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற சமூகப் பேச்சு காரணமாக அரசாங்கம் அவர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்வதற்குரிய சிரமங்கள் தொடர்பான பெரும்பாலான விடயங்களை அந்த குழுவிடம் முன்வைத்துள்ளதாக அறியமுடிகிறது.

ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்னாள் ஜனாதிபதிகள் தீர்மானம்

இந்நிலையில் தமது சிறப்புரிமைகள் குறைக்கப்படுவதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவது பயனளிக்கும் என முன்னாள் ஜனாதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளதுடன் தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு எதிர்பபையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கவுள்ளது.

சலுகைகள் குறைக்கப்படுமாயின், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டமூலத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக உரித்துடையவை எதுவும் இரத்து செய்யப்படவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

எவ்வாறாயினும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச 16 வாகனங்களில் 08 வாகனங்களை மாத்திரமே கையளித்துள்ள நிலையில் மீதமுள்ள 08 வாகனங்களையும் ரணில் விக்ரமசிங்க 11 வாகனங்களை மீள ஒப்படைக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன கையளிப்பு -மஹிந்த கூறுவது என்ன?

பாவனை மற்றும் பாதுகாப்புக்காக தற்போது ஆறு வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் வழங்கிய பணிப்புரைக்கமைய, ஆறு வாகனங்களில் நோயாளர் காவு வண்டி உட்பட 03 வாகனங்களை இன்று திங்கட்கிழமை(21.10.2024) வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This