உள்ளூர் மருந்து உற்பத்தியை பலப்படுத்தும் முயற்சி: ஒரு வருட ஒப்பந்தத்துக்கு அரசாங்கம் தயார்
உள்ளூர் மருந்துத் துறையை பலப்படுத்தும் முயற்சியில், குறிப்பிடத்தக்க 49 உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுடன் ஒரு வருட ஒந்தப்பத்தில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருகிறது.
தேசிய விநியோகத்துக்கு 454 அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் திறன்கொண்ட உள்ளூர் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு பிரதமர் ஹரினி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அமைச்சரவை ஏற்றுள்ளது.
ஏற்கனவே அரச மருந்துக் கூட்டுத்தாபனத்துடன் இதேபோன்று ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு இது கூடுதல் சிறப்பம்சமாகும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிப்பதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதி இத் திட்டமாகும்.
உள்ளூர் மருந்து உற்பத்தியை ஆதரிப்பதற்கான ஒரு மூலோபாயமாக 2013 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்த முன்முயற்சி அங்கீகரிக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஒப்பந்தங்களின் கீழ் உள்ளூர் நிறுவனங்களால் வழங்கப்படும் மருந்துகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பதற்கு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.