மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் ஷிஷிலா கிராமத்தின் கபிலா நதிக்கரையில் ஸ்ரீ ஷிஷிலேஷ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற கோயில் சிவன், சுவாமியம்பு அவதாரம் காரணமாக மத்ஸ்ய தீர்த்த க்ஷேத்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் கபிலா நதியில் உள்ள மஹாசீர் மீன்களை வணங்கி, அவற்றிற்கு மலர்களை சமர்பிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. மீனிடம் பிரார்த்தனை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கபிலா நதியைத் தவிர இந்த கோயிலின் எல்லா திசைகளும் மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.

நம்பிக்கைகளின்படி, விஷ்ணு நதியில் மத்ஸ்ய (மீன்) வடிவத்தில் வசிக்கிறார். எனவே தண்ணீர் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். மீனுக்கு ஒரு பிடி சாதம் கொடுத்தால் தோல் வியாதிகள் உட்பட அனைத்து நோய்களும் குணமாகும் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தற்போது கபிலா நதியில் மீன்களுக்கு பூக்கள் கொடுப்பதை ஸ்ரீ சிஷிலேஷ்வரா கோவில் நிர்வாகம் தடை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

CATEGORIES
Share This