சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகள்: அரசாங்கம் அதிரடி விசாரணைக்கு தயார்!
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்த ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ உள்ளிட்ட பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றமை தெரிவந்துள்ளது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆவணங்கள் அதிகளவில் காணப்படுவதால் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.
விசேடமாக, ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்குகள் உள்ளிட்ட பாரிய சர்ச்சைகளுக்குள்ளான விடயங்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலைப்படுத்தப்படும் முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பிழைகள் காரணமாக கடந்த காலங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்ட அநேகமான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி, அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய பல முறைப்பாடுகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.