தேசியவாதத்தை கையில் எடுத்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்: 4ஆம் திகதி அறிமுகம் – பிரமாண்ட விழா
மவ்பிம ஜனதா கட்சித் தலைமையில் சர்வஜன அதிகாரம் என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரான வர்த்தகர் லிதித் ஜயவீர, பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்வஜன அதிகாரம் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேச நாணயக்கார உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள், முன்னாள் மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் சர்வஜன அதிகாரத்துடன் கைகோர்த்துள்ளனர்.
தேசியவாதத்தை முன்னிறுத்தி மவ்பிம ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர கட்சியின் கொள்கை விலக மாநாட்டில் அறிவித்திருந்தார்.
இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளார்.
இதற்காக கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரமாண்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே கூறியிருந்தார். சர்வஜன அதிகாரம் கூட்டணியின் பிரதான நன்கொடையாளராகவும் இவர் இருப்பதால் வேட்பாளராக இவரையே அக்கூட்டணி அறிவிக்கும் எனத் தெரியவருகிறது.